வார இறுதி விடுமுறை காலத்தில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதை தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா, வைபவங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடல் போன்ற விடயங்களில் சுகாதாரப் பிரிவினர் வகுத்துள்ள சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படுமாறும் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகின்ற வார இறுதி நீண்ட விடுமுறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகள் தொடர்பாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவித்தார்.
பிரித்தானியாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.