நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் 20 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இதற்கமைய இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது.
சபாநாயகர் மஹந்த யாப்பா அபேவர்தனவுக்கும் நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை நிராகரித்துள்ளனர்.
இதேவேளை, இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனை தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனை தெரிவித்திருந்தார்.
அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வரை தான் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளப்போவதில்லை என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.