சீனி இறக்குமதிக்கான வரியை நீக்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அரசாங்கத்தினால் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக்கட்சியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஷ் இதனைத் தெரிவித்தார்.
வாழ்க்கை செலவு பாரதூரமாக அதிகரித்துள்ள போதிலும் பெருந்தோட்ட மக்களின் வலி நிறைந்த போராட்டத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கிலும் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டிய உமா சந்திரா பிரகாஷ் , தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.