அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகள்- முக்கியமான தொகுதிகளை கேட்டு பிடிவாதம்

266 0

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகளை கேட்டு பிடிவாதமாக இருப்பதால் தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா 35 தொகுதிகள் கேட்டு வற்புறுத்தியது.

ஆனால் கடந்த தேர்தலில் 2.84 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பதால் 20 தொகுதிகளுக்கு மேல் வழங்க அ.தி.மு.க. தயங்கியது.

ஆனால் வாக்கு வங்கி 2.84 சதவீதமாக இருந்தாலும் கடந்த தேர்தலில் 2-ம் இடம் வந்த தொகுதிகள், 60 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது பற்றிய விவரங்களை பா.ஜனதா தரப்பில் எடுத்துரைத்தனர்.

அப்போது தொகுதி எண்ணிக்கை பெரிதல்ல. எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்பதை யோசியுங்கள். அதன் அடிப்படையில் தொகுதிகளை கேளுங்கள் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும் பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகள் வழங்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி தலைவர்களும் இதற்கு ஒத்துக் கொண்டுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு பணியாற்றுங்கள் என்று தமிழக நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளை பெறுவது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சென்னையில் தியாகராய நகர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளை கேட்கிறது. மேலும் கொங்கு மண்டலத்தில் கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், பல்ல டம், சூலூர், ஊட்டி, கூடலூர் மற்றும் மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளையும், கன்னியாகுமரியில் நாகர்கோவில், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய 4 தொகுதிகளையும் கேட்டுள்ளனர்.

இவ்வாறு முக்கிய தொகுதிகளை கேட்டு பிடிவாதமாக இருப்பதால் தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.