கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை தற்போதைக்கு பெறமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தனது சமூக வலைத்தளம் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் குறைந்தது ஒரு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே தான் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.