அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கும் மாவட்ட வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பூத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளின் பிரசாரத்தில் தகவல் தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எல்லா துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது அரசியல் கட்சிகளும் இதை பயன்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கும் மாவட்ட வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பூத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 600 முதல் 1,000 வாக்காளர்களை சந்திக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசின் சாதனைகளையும், மக்கள் நல திட்டங்களையும் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை அடித்தட்டு மக்கள் வரை பிரபலப்படுத்த வேண்டும்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் அடங்கி உள்ள திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை ஆகிய 3 தொகுதிகளிலும் 886 பூத்கள் உள்ளன. இதற்கு 1,772 தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திருச்சியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுவரை அவர்களுக்கு 3 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்கள் தொண்டர்களுக்கு பிரசார யுக்திகளை வகுத்து கொடுப்பார்கள் என்று மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கூறினார்.
கிராமங்கள் வரை பிரசாரங்களை மேற்கொள்ளும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பிரசாரம் செய்வதோடு மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளையும் கண்டறிந்து மாநில தலைமை குழுவினருக்கு தெரிவிக்க வேண்டும்.
மாநில அளவிலான குழுவினர் தினமும் தி.நகரில் ஒரு ஓட்டலில் சந்தித்து மாவட்ட அளவில் இருந்து கிடைக்கும் தகவல்களை கட்சி தலைமைக்கு பகிர்கிறார்கள்.