கெய்ரோ தேவாலய மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்

279 0

201612141106484036_islamic-state-claims-cairo-cathedral-bombing_secvpfஎகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கிறிஸ்தவ தலைமை தேவாலயத்தில் சமீபத்தில் 25 உயிர்களை பறித்த மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

பண்டைக்காலத்தில் எகிப்து நகரின் தலைநகராக விளங்கிய அல்க்ஸான்ட்ராவில் கிறிஸ்துவுக்கு பின்னர் முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலர்களில் ஒருவரான மாற்கு உருவாக்கிய பழமையான தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது.

எகிப்து நாட்டின் கிறிஸ்தவ மதத்தினருக்கான தலைமை மதகுரு வாழும் இந்த தேவாலயம் மாற்கு தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய கெய்ரோ நகரின் அப்பாஸியா பகுதியில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தின் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு தற்போது ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. மேற்கண்ட தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதியான அபு அப்துல்லா அல்-மஸ்ரி என்பவனை தியாகியாக புகழ்ந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் செய்திக்குறிப்பு, எகிப்தில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான எங்கள் போர் தொடரும் என்றும் எச்சரித்துள்ளது.