சிறிலங்காவில் மேலும் 802 பேருக்கு கொரோனா – 07 உயிரிழப்புகளும் பதிவு

214 0

சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 802 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் சிறிலங்காவில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 75 ஆயிரத்து 654 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களில் 801 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 627 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே நேற்யை தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 865 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறுயுள்ளனர்.

இதனையடுத்து, கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கையும் 68 ஆயிரத்து 696 ஆக காணப்படுகிறது.

தற்சமயம் சிறிலங்கா முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 561 பேர் சிகிச்சைப் பெற்று வருவதுடன், சந்தேகத்தின் பேரில் 598 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இதற்கமைவாக சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.