சிரியாவில் வெளியேறும் மக்களை சுட்டுக் கொல்லும் ராணுவம்

275 0

201612141119094074_un-alleges-military-firing-on-civilians-in-syria_secvpfசிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். அவ்வாறு வெளியேறுபவர்களை ராணுவம் சுட்டுக் கொல்வதாக ஐ.நா. சபை குற்றம்சாட்டியுள்ளது.

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் ப‌ஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் சில பகுதிகளை வைத்துள்ளனர்.

ரஷியா ராணுவ உதவியுடன் அவற்றை சிரியா ராணுவத்தினர் கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள பெரிய நகரமான அலெப்போவை மீண்டும் கைப்பற்ற கடும் சண்டை நடக்கிறது.

இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். அவ்வாறு வெளியேறுபவர்களை ராணுவம் சுட்டுக் கொல்கிறது. இத்தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதுவரை தங்களுக்கு கிடைத்த தகவல்படி 82 பேர் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் குழந்தைகள் அடங்குவர்.

ராணுவத்தின் இத்தகைய தாக்குதலால் பொதுமக்களும், கிளர்ச்சியாளர்களும் அலெப்போ பகுதியை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இதற்கிடையே அலெப்போ நகரின் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு பல வாரங்கள் நடந்த சண்டை முடிவுக்கு வருகிறது.