ஹம்பாந்தோட்டையில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடும் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் உழியர்களின் கோரிக்கையை உடனடியாக எற்க வேண்டும்.
அவ்வாறு இல்லாது, ஊழியர்களை பணியிலிருந்து அரசாங்கம் விலக்குமாக இருந்தால் எமது அரசாங்கம் அமைந்தவுடன் கட்சி பேதம் பார்க்காமல் அவர்களை துறைமுகத்தில் இணைத்துக் கொள்வோம்.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது தொடரும் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.