அமெரிக்காவின் புளோரிடாவில் இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் மாயமான 16 பேரை அந்நாட்டு கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இரு படகுகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த 16 பேர் கடலில் மாயமாகினர்.
விசாரணையில், பஹாமாசின் பிமினியில் இருந்து 6 பேருடன் புறப்பட்ட படகும், கியூபாவின் ஹவானாவில் இருந்து 10 பேருடன் புறப்பட்ட படகும் புளோரிடா மாகாணம் அருகே வந்தபோது கடலில் கவிழ்ந்தது தெரிய வந்தது.
கடலில் விழுந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, அமெரிக்க கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. கடலோர காவல்படையின் விமானங்களும், படகுகளும் அனுப்பி வைக்கப்பட்டு கடலில் விழுந்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.