இம்மாதம் முதல் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி

215 0

கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் “இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையம்“ தேசிய கட்டத்தில் சேர்க்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

வத்தள – ஹெரவலபிட்டியில் அமைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையத்தை எதிர்வரும் புதன்கிழமை (17) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த ஆலை ஒரு நாளைக்கு 700 தொன் கழிவுகளைப் பயன்படுத்தி 10 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

இது தவிர, மக்கும் கழிவுகளைப் பயன்படுத்தி உயிர்வாயு மின்சாரம் தயாரிக்கும் முதல் திட்டம் இந்த ஆண்டு இறுதியில் மாத்தறையில் ஆரம்பிக்கப்படும் என்று டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தின் கோட்டாவிலவில் அமைக்கப்பட்டு வரும் இத்திட்டத்தில், ஒரு நாளைக்கு 40 தொன் குப்பைகளைப் பயன்படுத்தி 400 கிலோவோட் மின்சாரத்தை தேசிய கட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.