புகைத்தல் மற்றும் மதுபானம் பாவனை உடையோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பது யாவரும் அறிந்ததே.இந்நிலையில் தற்போது வரை சுமார் 1750000 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.ஆனால் அந்த தடுப்பூசி சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது .
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் சுமார் 18 மில்லியன் கோவிட் தடூப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இந்த கோவிட் ஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்படுபவர் சுமார் ஆறு மாத காலத்திற்கு புகைத்தல் மற்றும் மதுபானம் பாவனையை மேற்கொள்ளக்கூடாது என இலங்கை புகையிலை மற்றும் மதுபானம் மீதான அதிகார சபையை சேர்ந்த வைத்திய கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் புகைத்தல் மற்றும் மதுபானம் வாய்ப்பவர்களுக்கு அதை நிறுத்துவதற்கான பொன்னான வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.