பாகிஸ்தான் விமான போக்குவரத்து தலைவர் ராஜினாமா

312 0

201612140936409899_pakistans-national-carrier-chief-resigns-after-plane-crash_secvpfபாகிஸ்தான் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஆசம் சய்கோல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று இஸ்லாமாபாத் அருகேயுள்ள சிட்ரால் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 47 பேர் உயிர் இழந்தனர்.

இந்த விபத்துக்கு விமான என்ஜினில் ஏற்பட்ட கோளாறு என்பது தெரியவந்தது. இதற்கு பாகிஸ்தான் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தின் செயல்பாடுகள்தான் காரணம் என்றும், பயணிகள் விமானங்களை அந்த நிறுவனம் முறையாக பராமரிப்பது இல்லை என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் பாகிஸ்தான் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஆசம் சய்கோல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தன்மீது சாட்டப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் மன உளைச்சலுக்கு ஆளானதால் அவர் பதவி விலகியதாக தெரியவந்துள்ளது.

எனினும் இதுபற்றி பாகிஸ்தான் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தன்யால் கிலானி கூறுகையில், ‘சொந்த காரணங்களுக்காக ஆசம் சய்கோல் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக’ தெரிவித்தார்.