இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்-மத்திய வங்கி அறிவிப்பு

203 0

இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று மத்தியவங்கியில் நடைபெற்றது.

இதில் கருத்து தெரிவித்த மத்தியவங்கியின் ஆளுனர் பேராசியர் டப்ள்யு. லக்மஸ்மன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என்று அவர் இதன்போது கூறினார்.

மாற்று வழிகள் ஊடாக இலங்கையின் பொருளாதாரம் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் டபிள்யு.டி.லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

எனினும் பொருளாதார விமர்சகர்கள், 2020இன் இரண்டாம் காலாண்டின் வீழ்ச்சிப்போக்கினைக் கொண்டு, 2021ம் ஆண்டுக்கான பொருளாதார நிலைமைகள் குறித்த எதிர்வுகூறலை மேற்கொள்ள முனைவதாக அவர் கூறியுள்ளார்.

கொள்வனவு நிர்வாக சுட்டெண் ஊடாக, இலங்கையில் வர்த்தகங்கள் மீதான நம்பிக்கை மேலோங்கியுள்ளமை தெளிவாகியுள்ளது.

நீண்டகாலமாக இறக்குமதிகளில் தங்கியிருந்த பொருளாதார கொள்கைகளுக்கு மாற்றுக்கொள்கைகள் தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றன.

இது நீண்டகால அடிப்படையிலான கொள்கையாகும்.

எனினும் குறுங்காலத்தில் விலைநிலைகளில் இது மாற்றுத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்