விசேட பரீட்சை நிலை யங்கள் அமைக்கப் பரீட்சைகள் திணைக்களம் கவ னம் செலுத் துகிறது

227 0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு மாவட்ட ரீதியில்  விசேட பரீட்சை நிலை யங்கள் அமைக்கப் பரீட்சைகள் திணைக்களம் கவ னம் செலுத் துகிறது.

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகி ச்சை மையங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றலாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரி வித்துள்ளார்.

குறித்த மத்திய நிலையங்கள் சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகத்தின் அனுமதி கீழ் அடையாளம் காணப் படும் என்றும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

குறித்த மாணவர்களுக்கு வசதியாக அனைத்து பரீட்சை நிலையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வகுப்பறை அமைக்கத் தீர்மானித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 4513 க்கும் அதிகமான பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.