கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது குறித்து இன்னும் தீர்க்கமான முடிவில்லை – ஹேமந்த

212 0

கொரோனா வைரஸ் காரணமாக மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார அமைச்சின் மூலம் உரிய வழிமுறைகள் கிடைக்கப்பெற்ற பின்னர், அதற்கமைய செயற்பட முடியும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றில் பிரதமர் விடுத்த கருத்து தொடர்பாக மாத்திரமே தற்போது தகவல் கிடைத்துள்ளன.

அவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்போது சுகாதார அமைச்சின் ஊடாக உரிய முறைமைகளுடனான வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

இதற்கமையவே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.