மத அடிப்படைவாதத்தினால் நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால், சட்டத்தினால் அதற்கு தீர்வைத் தேட முயற்சிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வானொலிஇ தொலைக்காட்சி அல்லது அச்சு ஊடகங்கள் என்பவற்றின் கூடாக அடிப்படைவாதம் தூண்டப்படுவதாக இருந்தால், அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் இந்நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் எதனையும் தெரிவிக்க முடியும். இனவாதமும் இதன் ஊடாகத்தான் தூண்டப்படுகின்றது. இது தொடர்பில் சகலரையும் அழைத்து அறிவுறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். இதனை நெறிப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து நாம் முயற்சிப்போம். அது சாத்தியப்படாது போனால் சட்டத்தினை நாடுவோம்.
எது எப்படிப் போனாலும் கடந்த 2015 ஜனவரி 08 இற்கு முன்னர் இருந்த ஒரு நிலைக்குச் செல்வதற்கு இடமளிக்கப் போவதில்லை. எமக்கு நாட்டை அமைதியை நோக்கி எடுத்துச் செல்வதே நோக்கம் எனவும் தேசிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.