மக்களின் இலக்குகள் அடைய இன்னும் பல இணைப்புகள் பல தூரம் பயணம் செய்ய வேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ் ஸ்ரோங்

250 0

மக்களின் பேரெழுச்சி சில்லறை விடையங்களுக்காக பேராட்டத்தின் தன்மைகள் பிரிந்துவிடக்கூடாது என தெரிவித்த அருட்தந்தை லியோ ஆம்ஸ் ஸ்ரோங் மக்களின் இலக்குகள் அடைய இன்னும் பல இணைப்புகள் பல தூரம் பயணம் செய்ய வேண்டும் இணைப்புக்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்தார் .

மக்களின் பேரெழுச்சி தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்,

பல ஆண்டுகளாக பல்வேறு விதமான பிளவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் வடக்கு கிழக்கு, சமயம் ,சாதி என பல பிரிவுகளாகவும் கட்சிகளுக்கிடையில் பல மோசமான பிளவுகளாகவும் இருந்துவந்துள்ளோம்.

இவற்றையெல்லாம் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது பலருக்கு எண்ணம் இருந்தது ஆனால் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியானது ஒற்றமையை ஒன்றுகூடலை புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த எழுச்சிக்கு பல விதமான காரணங்கள் இருக்கின்றன பல கட்ட போராட்டங்கள் ; பல கட்ட கூட்டங்கள் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கள் பல்வேறு முயற்சிகளின் விளைவாக ஒருங்கிணைத்து இந்தப்போராட்டத்தை நிகழ்ந்துள்ளது

2009 ஆம் ஆண்டுக்குப்பின் தோற்றுப்போனோம் என்ற மனப்பாங்குதான் எல்லோர் மனங்களிலும் ஆழமாக இருந்தது இதில் இருந்து நாங்கள் ஒரு எழுச்சியை ஏற்படுத்தமுடியுமா என்ற கேள்வி எல்லோர் மனங்களிலும் அற்றுப்போயிருந்தது எனினும் இந்த பேராட்டத்தின் பின் அந்த எழுச்சி ஒன்று மேலோங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள் கூறவேண்டும். இதில் உழைத்த சிவில் சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் ,பாதிக்கப்பட்டவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள்,கிராம மட்ட அமைப்புகள் , மதத்தலைவர்கள் எழுச்சியில் ஈடுபட்டிருந்தார்கள் இதில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி நடத்தப்பட்ட போராட்டம் அல்ல பலரும் மனப்பூர்வமாக ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட ஒட்மொத்த தமிழ் மக்களின் தமிழ் பேசம் மக்களின் போராட்டமாறியிருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஆகவே இந்தப்போராட்டம் எழுச்சியின் எல்லையை அடைந்துள்ளது. இன்னும் நாங்கள் இந்த எழுச்சிக்குப் பின்னால் பல்வேறு காரணங்களுக்காக இணையவேண்டியிருக்கின்றது. இன்னும் பல இணைப்புக்களுக்காக பேசவேண்டியிருக்கின்றது என்பதை இப்போராட்டத்தின் பின்னர் கண்டுள்ளோம்.

இப்போராட்டத்தின் பின்னர் எங்கிருந்து எந்த இடத்தை நோக்கி பயணிக்கப்போகின்றோம் என்பதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தை யாரும் எவரும் தமது போராட்டமாக மாற்றிவிடக்கூடாது என்பதுதான் எமது விருப்பம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் போராட்டம் இதில் முஸ்லிம்களும் இணைந்திருந்தார்கள் அவர்களுக்கான போராட்டம் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இணைந்திருந்தார்கள் ;இதை யாரும் ஒருவருடைய போராட்டமாக பார்க்கமுடியாது. இப்போராட்டத்தினை சில்லறை விடையங்களுக்காக இந்தப்பேராட்டத்தின் தன்மைகள் பிரிந்துவிடக்கூடாது என்பதையும் நாங்கள் கூறவிரும்புகின்றோம்.

இந்தப் போராட்டம் இன்னும் சில மைல் தூரங்கள் செல்லவேண்டியுள்ளது இதில் எழுந்து வந்த இளைஞர்களை வழப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அவர்களை சரியான இலக்குகளுடன் பயணிக்கவைக்க வேண்டியுள்ளது இது& தார்மீகக்கடமை இந்தக் கடமையை சிவில் சமூகத்திற்கு அரசியல், பிரதிநிதிகளுக்கு,மதத்தலைவர்களுக்கு இருக்கின்றது.

ஆகவே இந்த எழுச்சியின் பின்னர் பல தூரம் செல்லவேண்டும் ஐ.நா.வரை செல்லவேண்டும்.அது மட்டுமன்றி எமது மக்களுக்குள் ஆழமாக கொண்டு செல்லவேண்டும். எனவே அடுத்த கட்டம் நோக்கி செல்ல முயற்சிகள் மேற்கொள்ளபடவேண்டும் என்றார் .