குளத்திலுள்ள நீரை சிக்கமான பயன்படுத்துங்கள் – சமன் வீரசிங்க

306 0

 

download-6நாட்டில் உள்ள குளத்திலுள்ள நீரை சிக்கமான பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரும்போக உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பிரதான நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகிக்கபடவுள்ளதாக நீர்ப்பான பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க தெரிவித்தார்.

பெரும்போக உற்பத்தி நடவடிக்கைகளுக்காக 40 பிரதான நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகிக்கப்படும் தேவைக்கு அமைவாக ஏனைய நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை விநியோகிப்பதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு 33 சதவீதமாகவே இருக்கின்றது. இடைக்கால பருவப்பெயர்ச்சி காலநிலையின் மூலம் உரிய மழை வீழ்ச்சி கிடைக்காததால் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்று கொழும்பில் நடைபெறும் என்று நீர்ப்பான பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க தெரிவித்தார்.