நீண்டகால தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில், புதிய அரசியல் யாப்பில் கடந்த ஒருவருடத்தில் கடக்க வேண்டிய சில படிகளைத்தாண்டி தேசிய அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் செயற்படுவது போல செய்திகள் வெளியிடுவதாக என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று வடமராட்சி கிழக்கு மரதங்கேணி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக்குறிப்பிட்டார்.