ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்ய கோரி மனுதாக்கல்

199 0

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவொன்றை பரிசீலனை செய்ய திகதி குறிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த மனுவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஆர் ராசமாணிக்கம் தாக்கல் செய்தார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அதன் தலைவர், பணிப்பாளர் சபை, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினரான தயா சந்திரசிறி ஜயதிலக, அதன் உறுப்பினரும் முன்னாள் பொலிஸ்மா அதிபரான சந்திரா பெர்ணான்டோ, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட 14 பேர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.