போதிய பலனளிக்காததால் ஆக்ஸ்போர்டு கொரோனோ தடுப்பூசி தென்னாப்பிரிக்காவில் நிறுத்தி வைப்பு

220 0

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதை தென்னாப்பிரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. லேசான கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக போதிய பலன் அளிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விஞ்ஞானிகள் குழு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடர சிறந்த வழி குறித்து ஆலோசனை வழங்கும் வரை இந்த தடை நீடிக்கிறது.
அமெரிக்காவின் பைசர் கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மருந்தை இந்தியாவில் சீரன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் தென்ஆப்பிரிக்காவுக்கு 10 லட்சம் டோஸ்கள் வழங்கியது.
இந்திய அரசு 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்க கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளுக்கு இலவசமாகவும், ஒப்பந்தம் அடிப்படையிலும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.