ஜெனீவாவில் உள்ள ஐ நா நோக்கி ஈருளிப்பயணம் மனித நேயப் போராளிகளினால் நெதர்லான்டில் ஆரம்பம்.

725 0

ஜெனீவாவில் நடைபெறயிருக்கும் ஐக்கியநாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசிற்கு இனியும் காலக்கெடு கொடுக்கக்கூடாது. அனைத்துலக நீதிமன்றத்திற்கு அவர்களைக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையினைப் பலமாக முன்வைத்து இன்று 8.2.2021 திங்கட்கிழமை நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக நீதிமன்றத்திற்கு முன்பாக இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ நா வரையிலான மனிதநேய ஈருளிப்பயணம் ஆரம்பமாகி உள்ளது.

இன்று சகல நாடுகளிலும் இருக்கக்கூடிய கொள்ளை நோயான கொரோனா நோயின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அத்தோடு இன்று ஐரோப்பாவில் நிகழும் காலநிலைகளுக்கு முகம்கொடுத்தபடி மனிதநேயப் போராளிகள் தங்களை தயார்படுத்தியபடி அணிதிரண்டுள்ளனர். நெதர்லாந்தில் ஆரம்பித்து பெல்ஜியம் லக்ஸ்சம்பேர்க், யேர்மனி, பிரான்சு, வளியாக சுவிஸ் நாட்டுக்குள் இந்த மனிதநேய ஈருளிப்பயணம் பயணிக்கக உள்ளது. 22 2.2021 திங்கக்கிழமை இப் பயணம் ஜெனீவாவில் உள்ள ஐ நா முன்றலில் முருகதாசன் திடலில் நிறைவடையும்.

பின்பு அத்திடலில் மனிதநேயப் போராளிகளுடன் மக்களும் இணைந்து ஒரு வாரத்திற்கு சுழற்சி முறையிலான உண்ணாநோன்பு கடைப்பிடிக்கப்படும். பின்பு 1.3.2021 திங்கட்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலம் கொரோனா நிலமைகளைக் கருத்திற் கொண்டு நடைபெறும். ஆகவே இவற்றைக் கருத்திற் கொண்டு அனைத்துத் தமிழ்மக்களையும் இந்த உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.