அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்ய குமார் குணரட்ணம் இணக்கம்!

291 0

1153615366kumar-720x480அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்து இலங்கை குடியுரிமையை பெறுவதற்குமுன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் அறிவித்துள்ளார்.

இலங்கை குடியுரிமையைப் பெறுவதற்காக குமார் குணரட்ணம் அனுப்பி வைத்திருக்கும்விண்ணப்பப் படிவத்தை தான் ஆராய்ந்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களப் பணிப்பாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக சிறைத்தண்டனை அனுபவித்த குமார் குணரட்ணம், இந்த மாதம் 02ம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், குமார் குணரட்ணவிற்கு மூன்று மாத கால தற்காலிக வீசாவழங்கியிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குமார் குணரட்னத்திற்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டால் அவர் அரசியல்செயற்பாடுகளில் ஈடுப்படுவார் என நிஹால் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் குடிவரவு சட்டங்களை மீறிச் செயற்பட்டமைக்காக குமார் குணரட்னத்திற்குஓராண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.