ஹட்டனில் O/L மாணவர்கள் மூவருக்கு கொரோனா!

218 0

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள ஹட்டன் பாடசாலையொன்றில் மூன்று மாணவர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் தரம் 11 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலையின் மாணவர்கள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த மூன்று மாணவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த மாணவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் வட்டவளை பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.