வேலூரில் விதியை மீறி அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர்- துரைமுருகன் குற்றச்சாட்டு

221 0

முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூரில் விதியை மீறி அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டம் -ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு. காவல் துறையையே கையில் வைத்திருப்பவர் முதல்-அமைச்சர். இப்படி இருந்தும் சசிகலா வருகையால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று காவல் துறையில் அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி விதியை மீறி வேலூரில் அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். பேனர் வைக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அ.தி.மு.க.வினர் மதிக்கவில்லை. மனித உரிமை ஆணையம் குறித்த உத்தரவையா மதிக்க போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்