முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி

270 0

முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி இறங்கி உள்ளது.முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி இறங்கி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே முதன்முதலாக தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதற்கு போட்டியாக அ.தி.மு.க.வினரும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் முதன்முதலாக சட்டசபை தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் இறங்கி பிரசாரத்தை தொடங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி. சோழ மண்டலத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தங்கள் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற கட்சிகளில் எல்லாம் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட பலர், விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்குள் யார் சீட் பெறுவது என போட்டியே நிலவி வருகிறது. ஆனால் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களம் இறங்கியுள்ள நாம் தமிழர் கட்சிக்கு வேட்பாளர் தேர்வு பெரியவி‌‌ஷயமாகவே இல்லை. மற்ற கட்சியினர் களத்திற்கு வர தயாராகி கொண்டு இருக்கும்நிலையில் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.