தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்- திருமாவளவன்

303 0

201612122258204318_admk-tamil-nadu-rule-should-be-extended-5-years_secvpfமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் நீட்டிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரால் ஏற்கனவே கைகாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது கட்சியின் புதிய பொதுச்செயலாளர் யார்? என்ற விவாதம் எழுந்துள்ளது.

இது அ.தி.மு.க.வின் உட் கட்சி விவகாரம். இதில் தலையிடுவதற்கும், கருத்து கூறுவதற்கும் எதுவும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் நீட்டிக்க வேண்டும்.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நெருக்கடி தரக்கூடாது. மக்கள் நலக்கூட்டணியில் எந்த ஒரு குழப்பமும், விரக்தியும் இல்லை. மக்கள் நலக்கூட்டணி மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டும், சேவையை காரணமாக கொண்டும் தொடர்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.