நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

303 0

201612131310250540_tirunelveli-express-train-bomb-threat-police_secvpfநெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த ஒருவருக்கு கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் சென்னையில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 24-ந்தேதிக்குள் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், குறிப்பாக அந்த ரெயில் மதுரையில் இருந்து நெல்லைக்கு செல்லும் வழியில் வெடிக்கும் என்றும் அதில் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் உடனே சென்னை ரெயில்வே அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். மேலும் அந்த கடிதத்தில் கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலைக்கும், முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனாலும் போலீசார் நம்மை தான் தொடர்புபடுத்துகிறார்கள்.எனவே தான் இந்த சம்பவத்தை நிகழ்த்த உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்ததாக அவர் ரெயில்வே அதிகாரியிடம் தெரிவித்தார்.

கடிதத்தில் கூறப்பட்டு உள்ள தகவல் உண்மைதானா என்ற அடிப்படையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து கிளம்பும் நெல்லை எக்ஸ் பிரஸ் ரெயில் வார்தா புயலால் ரத்து செய்யப்பட்டது.இந்த கடித சம்பவத்தால் மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் நேற்று ரெயில் நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.