வார்தா புயல் எதிரொலி: சென்னையில் அதிகபட்சமாக 38 செ.மீ. மழை பதிவு

302 0

201612131333076728_wardha-storm-maximum-rainfall-in-chennai_secvpfவார்தா புயல் காரணமாக சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘வார்தா’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மழையுடன் பலத்த காற்று வீசியது.

இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி சென்னை தனித்தீவாக காட்சியளித்தது.

இந்நிலையில் வார்தா புயல் காரணமாக சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “சென்னை சத்யபாமா கல்லூரியில் அதிகபட்சமாக 38 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காட்டுக்குப்பம் பகுதியில் 34 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரம் பகுதியில் 28 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச மழை பதிவான இடங்கள்:

சத்யபாமா பல்கலைக்கழகம் – 38 செ.மீ
காட்டுக்குப்பம்              – 34 செ.மீ
காஞ்சிபுரம்                 – 28 செ.மீ
களவாய்(வேலூர் மாவட்டம் )- 23 செ.மீ
பூந்தமல்லி(திருவள்ளூர்)     – 22 செ.மீ
செம்பரம்பாக்கம்             – 21 செ.மீ
ஏற்காடு(சேலம் மாவட்டம்) – 15 செ.மீ
அஞ்சட்டி(கிருஷ்ணகிரி மாவட்டம்)- 11 செ.மீ
செய்யாறு(திருவண்ணாமலை) – 11 செ.மீ
மரக்காணம்(விழுப்புரம்)- 7 செ.மீ
பாலக்கோடு(தருமபுரி) – 4 செ.மீ
உதகமண்டலம்(நீலகிரி)- 2 செ.மீ
ஸ்ரீமுஷ்ணம்( கடலூர்) – 1 செ.மீ