மின்சாரம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

292 0

201612131409513408_damages-caused-by-lack-of-electricity_secvpfசென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

1. தண்ணீர் இல்லை:

மின்சாரம் இல்லாததால் மின் பம்புகளை இயக்கி தொட்டியில் தண்ணீரை ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகி இருக்கிறது. வார்தா புயல் தாக்கும் முன்பே, சென்னை மக்கள் தங்கள் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் போதுமான அளவுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும்படி தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி மக்களும் தொட்டிகளில் நீரை சேமித்து இருந்தனர்.

நேற்று ஒரே நாளில் 90 சதவீதம் நீர் காலியாகி விட்டதால் இன்று காலை பலரும் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். குளியலறை, கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் திணற நேரிட்டது. இன்று இரவுக்குள் மின் இணைப்பு கிடைக்காவிட்டால் தண்ணீருக்காக பொதுமக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாக நேரிடும்.

2. சமையல் பாதிப்பு:

மின்சாரம் தடை பட்டுள்ளதால் பெரும்பாலான வீடுகளில் சமையல் செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மிக்சியில் அரைக்க முடியாமல் பலர் மாற்று வழியில் திணற நேரிட்டது. அது போல மின்சாரம் இல்லாதது பிரிட்ஜ் பயன்பாட்டை முடக்கி இருப்பதால், அதனுள் வைக்கப்பட்டிருந்த அத்தியாவசியப் பொருட்கள் கெட்டு போய் விட்டது. இது குடும்பத் தலைவிகளை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

3. பொழுதுபோக்குக்கு வழி இல்லை:

மின் தடை காரணமாக இளைஞர்கள், வேலையில் இருப்பவர்கள், மாணவர்கள் கம்ப்யூட்டர்களை இயக்க முடியாமல் தவித்துள்ளனர். கம்ப்யூட்டர் இல்லாத பட்சத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்றால் அதற்கும் வழி இல்லாமல் உள்ளது. எனவே மின்சாரம் இல்லாததால் பொழுதுபோக்கு அம்சங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது.

4. தொலைத்தொடர்பு பாதிப்பு:

மின் இணைப்பு துண்டிப்பால் சென்னை மக்களிடையே தொலைத்தொடர்பு தகவல்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சில இடங்களில் மட்டும் தரைவழி பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்த முடிந்தது. செல்போன் சேவைகள் முடங்கியதால் மக்களுக்கு ஒரு கை ஒடிந்தது போல் ஆகிவிடடது.

அதிலும் இன்று பெரும்பாலானவர்களின் செல்போன்களில் “ஜார்ஜ்” தீர்ந்து போனது. இதன் காரணமாக வாட்ஸ்அப் தகவல்களை பெற முடியவில்லை. செல்போன்களின் பயன்பாடு முற்றிலும் இல்லாமல் போனதால் பலரும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல காணப்பட்டனர்.

சிலரிடம் செல்போனில் ஜார்ஜ் இருந்தும் பயன்படுத்த முடியாத சோகம் நிலவியது. ஏனெனில் சென்னையில் உள்ள பெரும்பாலான செல்போன் டவர்கள் மின்சாரத்தால் இயங்குபவை. ஜெனரேட்டர் வசதி இல்லாத செல்போன் டவர்கள் முடங்கியதால் செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டது.

5. பெட்ரோல் இல்லை:

சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகள் மின்சாரத்தை மட்டுமே நம்பி இயங்குகின்றன. மின்சாரம் இல்லாததால் அந்த பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோலுக்கு அலைய நேரிட்டது.

பெரிய கடைகள், தனியார் நிறுவனங்கள், குடிதண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் ஆகியவையும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை தி.நகரில் உள்ள பெரிய ஜவுளி கடைகள், நகைக் கடைகள் ஜெனரேட்டர் மூலம் வியாபாரத்தை நடத்தின. ஆனால் வாடிக்கையாளர்கள் விரல் விட்டு எண்ணும் வகையிலே வந்திருந்தனர். எனவே சென்னையில் அனைத்துத் துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.