தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையிலான சந்திப்பு இன்று..!

222 0

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், நிதி மற்றும் மூலதன சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையிலான தீர்மானமிக்க சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

குத்தகை சலுகைகளை தொடர்ந்து நீடிக்குமாறு பேருந்து சங்கங்கள் முன்வைத்துள்ள யோசனை உட்பட, பேருந்துதுறை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

தமது தொழிற்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாவிட்டால், பெரும்பாலும் இந்த வாரம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவேண்டி ஏற்படும் என பேருந்து தொழிற்சங்கம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.