பொறுப்பற்ற நடத்தை காரணமாக அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மக்கள் மத்தியில் கொவிட்-19 இறப்பு மற்றும் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போதைய நிலைமை பாதுகாப்பானது என்றும் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மக்கள் நம்புகின்றனர் என அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹானா தெரிவித்தார்.
எனவே, கடந்த ஆண்டு டிசம்பருக்கு முன்பு செய்ததைப் போல மக்கள் தங்கள் பயணத்தை கட்டுப்படுத்தவில்லை.
ஆகையால், அடுத்த இரண்டு வாரங்களில் வைரஸ் பரவுவதில் பெரும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.