2020 ல் பால்மா இறக்குமதி வீழ்ச்சியால் 50 பில்லியனுக்கும் அதிகமான சேமிப்பு!

196 0

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து பால்மாவை இறக்குமதி செய்யாமல் கிட்டத்தட்ட 50 பில்லியனுக்கும் அதிகமான தொகையை சேமிக்க முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் நிலை காரணமாக கடந்த ஆண்டில், குறைந்த அளவிலான பால்மாவை மட்டுமே இலங்கை இறக்குமதி செய்துள்ள நிலையில் சமீபத்திய சுங்க தரவுகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மனிதகுலத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்தாலும் எதிர்பார்த்ததை விட விரைவில் தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2022 ல் இலங்கையில் எந்த பால்மா இறக்குமதி இருக்காது என்றும் அதற்குள் பால்மா துறையில் உள்ள முறையை மாற்றி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அரச மற்றும் தனியார் பிரிவு விவசாயிகளை இணைத்துக் கொண்டு குறுகிய மற்றும் நீண்ட கால திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த திட்டம் மொத்த உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு எட்டப்பட்ட அதேவேளை சிறு பால் பண்ணையாளர்களின் வருவாயை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

தற்போது, ​​சிறிய அளவிலான சிறு பால் பண்ணையாளர்கள் தற்போதைய தேசிய பால் உற்பத்தியில் 85% பங்கைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது