சிரியாவின் பழமைவாய்ந்த பெல்மைரா நகரில் சிரியா இராணுவம் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடையே தற்போது கடும் மோதல் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமா பிரதேசத்தில் சடலங்கள் பலவற்றை காணக்கூடியதாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பெல்மைரா நகரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
இந்த நிலையிலேயே, பெல்மைரா நகரை கைப்பற்றும் நோக்கில் அரச படைகள் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.