வர்தா சூறாவளி காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த சென்னைக்கான வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் சென்னையில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பொருட்டு உடன் நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, ஐந்து வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வர்தா சூறாவளி காரணமாக, சென்னைக்கான தமது சேவைகளை ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் நேற்றிலிருந்து இன்று காலை 7 மணி வரையில் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.