வர்தா சூறாவளி – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

327 0

vdhaதமிழ் நாட்டைத் தாக்கிய வர்தா சூறாவளியின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும் நேற்றையதினம் இந்த சூறாவளி கடுமையாக தாக்கியது.

இதனால் சுமார் 20 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவல்லூர் பகுதிகளின் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தின் சேவைகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதுடன், தொடருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுதாபத்தை தெரிவித்திருப்பதுடன், உதவிகளும் உரிய வகையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.