சிங்கராஜா வனத்தில் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

322 0

vallapattaiதெனியாய சிங்கராஜா வனத்தில் வல்லப்பட்டை வெட்டிய சந்தேக நபர் ஒருவரை தெனியாய வன பாதுகாப்பு காரியாலய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்தனர்.

தெனியாய வன பாதுகாப்பு காரியாலய உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை அடுத்தே சந்தேக நபர் தெனியாய கிரிவல்தொல காட்டுப் பகுதியில் வைத்துசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் இறக்குவானை கலவானை பொதுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இவர் ஜந்து பிள்ளைகளின் தந்தை எனவும் இவரின் மகள் ஒருவர் பல்கலைகழகத்தில் பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.