நில்வளா கங்கையின் மொறவக்க பிரதேசத்தில் திடீரென மீன்கள் இறந்து காணப்படுவதாகவும் அதனை உட்கொண்ட உயிரினங்களும் இறந்து காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் மொறவக்க காவல்துறை நிலையத்திற்கு தெரிவித்ததை அடுத்து காவ்லதுறையினர் மொறவக்க சுகாதார வைத்திய பரிசோதகர் காரியாலயத்திற்கு அறிவித்துள்ளனர்.
மொறவக்க சுகாதார வைத்திய அதிhகாரி சம்ப இடத்திற்குச் சென்று நில்வளகங்கையின் அண்டிய பகுதியை பரிசோதித்த போது இறந்த மீன்களை கண்டுள்ளனர்.
இந்தநிலையில், நில்வளா கங்கையின் நீரை பரிசோதித்த பின்னர் நீரில் நஞ்சு பொருட்கள் கலக்கப்பட்டிருப்பதனால் இவ்வாறு மீன்கள் இறந்திருக்கலாம் எனதெரிவித்தனர்.
வயல்களுக்காக பயன் படுத்தப்பட்ட கிருமிநாசினிகள் கலந்திருக்கலாம் என சந்தேகம் நிலவுவதோடு , நீரை பரிசோதனை செய்வதற்கு நாரா நிறுவனத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொறவக்க பிரதேசத்தில் நில்வளா கங்கை நீரை பயன்படுத்த வேண்டாம் என ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.