இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

237 0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 7பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  மக்கொன பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆணொருவர், வட கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அங்கொட தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் காரணமாக 2021 பெப்ரவரி 3 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று வேஉட பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆணொருவர், கண்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தெல்தெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, மாரடைப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக 2021 பெப்ரவரி 3 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கடுகஸ்தொட்ட பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தெல்தெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, சிறுநீரக நோய் மற்றும் மாரடைப்பு காரணமாக 2021 பெப்ரவரி 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மேலும் ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆணொருவர், ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 பெப்ரவரி 04 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பியகம பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக 2021 பெப்ரவரி 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று திக்வெல்ல – போதரகந்த பகுதியைச் சேர்ந்த 78 வயதான பெண்ணொருவர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று, மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக 2021 பெப்ரவரி 1 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மேலும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆண்ணொருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 பெப்ரவரி 4 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்” என அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.