நெல்விநியோக திட்டம் ரத்து

336 0

vadansamba_2348803_2445659fஅரசாங்கத்திடம் உள்ள ஒரு லட்சத்துக்கு 50 ஆயிரம் மெட்ரிக் தொன்  நெல்லை விற்பனை செய்யாதிருக்க இலங்கை நெற்சபை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது அரிசியின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்தும் வரையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஒன்றரை லட்சம் மெற்றிக் தொன் நெல்லை விநியோகிக்காதிருக்க அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக இந்த நெல்லை விநியோகிப்பதற்கான விலைக் கோரலை நெற்சபை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.