அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் இலங்கையின் ஆடைத் தொழிற்துறையில் பாதிப்புகள் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய ஆடையேற்றுமதி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஆடைகளில் 44 சதவீதமானவற்றை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால் ட்ரம்ப் தெரிவான பின்னர், அமெரிக்காவிற்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதி பாதிப்படையலாம் என்று கருதப்பட்டது.
எனினும் அதற்கு வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.