சென்னையில் வர்தா சூறாவளி தாக்கியதை அடுத்து ஏற்பட்ட கடுமையான காலநிலை தற்போது ஓரளவு சீரடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூறாவளி சென்னையில் 120 தொடக்கம் 130 கிலோமீற்றர் என்ற வேகத்தில் வீசி இருந்தது.
இதனால் அங்கு நான்கு பேர் பலியானதுடன், 20 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவல்லூர் ஆகிய பகுதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவிலும் வர்தா சூறாவளி தாக்கி இருந்தது.
சென்னை விமான நிலையத்தின் விமான சேவைகள் அனைத்தும் தற்போதும் ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.