அலெப்போவில் தொடரும் அட்டூழியங்கள்

315 0

nigeria-415x260சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளை சிரிய அரசாங்கப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய அளவான பகுதியில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் அனைத்து தரப்பினரும், குறிப்பாக சிரிய அரசாங்கப் படையினரும் அவர்களின் ஆதரவாளர்களும் பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.