இலங்கையில் ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலனை

213 0

ரஷ்யா மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதலைப் பெறுவதற்கான கோரிக்கைகளை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தற்போது பரிசீலித்து வருகிறது.

ஒப்புதல் பெற அனுப்பப்பட்ட ஆவணங்களை தற்போது ஆணையகம் மதிப்பீடு செய்து வருவதாக தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்த போதிலும் ரஷ்யாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே அவை உள்நாட்டில் பதிவு செய்ய தாமதத்திற்கு வழிவகுக்கும்.

எவ்வாறெனினும் தடுப்பூசிகளை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்ற பின்னர் இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.