நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் – எஸ்.பி.திஸாநாயக்க

319 0

s-b-dissanayake13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கூறியுள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அமுலில் இருப்பதன் காரணமாகவே உயர் நீதிமன்றம் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மாகாண சபைகள் தன்னிச்சையாக செயற்படுவதை தடுப்பதற்கு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.