இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரையில் அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணங்களை குறைப்பதற்கான திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலாக்கப்படவுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.