இலங்கையின் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 3 தினங்களுக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான விசேட விவாதம் நடைபெறவுள்ளது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல சீனாவின் சின்ஹுவா ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் உருவாக்கப்பட்ட ஆறு தெரிவுக் குழுக்களும் தங்களின் அறிக்கைகளை அரசாங்கத்திடம் கையளித்திருக்கின்றன.
இந்த அறிக்கைகள் தொடர்பில் ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் விவாதிக்கப்படும்.
இதுவே ஊடகங்களும் அறியும் வகையில் அரசியல் யாப்பு தொடர்பில் இலங்கையில் விவாதிக்கப்படும் முதல் சந்தர்ப்பமாகும்.
இதற்கு முன்னர் அரசியல் யாப்பு தயாரிப்பு நடவடிக்கைகள் ரகசியமாகவே இடம்பெற்றிருந்தது என்று அவர் கூறியுள்ளார்.