தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பாழாகிறது – சீ.வி.விக்னேஸ்வரன்

329 0

wigneswaran2_1654671gதென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மை அரசியல்வாதிகளின் உண்மைக்கு புறம்பான அறிக்கைகள் காரணமாக, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பாழாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் கூறுகின்ற கருத்துக்களை திரிபுப்படுத்தி முக்கிய அரசியல்வாதிகள் சிலரே உண்மைக்குபுறம்பான அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

இது தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்று தமிழ் மக்கள் அரசாங்கத்தின்பால் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பை வீணடிக்கும் வகையில் அமைந்துவிடுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.